இந்த 3 மாவட்ட மக்களே உஷார்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எப்போ? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 3 மாவட்ட மக்களே உஷார்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எப்போ? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலைர ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், உட்பட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கடல்பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவித்துள்ளது.