ஓட்டுனரை தாக்கிய உரிமையாளர்...போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!

ஓட்டுனரை தாக்கிய உரிமையாளர்...போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த வாண்டன் விடுதி பகுதியைச் சேர்ந்த ராமராஜன், கடந்த 5 ஆண்டுகளாக தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பிய பேருந்து ஓட்டுனரை, வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறி தனியார் பேருந்தின் உரிமையாளர் வரவழைத்துள்ளார். 

அதன்படி, அங்கு சென்ற பேருந்து ஓட்டுனர் ராமராஜனை, வரவு செலவு கணக்கில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக கூறி, பணியாளர்களை வைத்து ராமராஜனை கொலை வெறி தாக்குதல் நட்பேருந்து உரிமையாளர், சக பணியாளர்களை வைத்து ராமராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, பேருந்து உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சுமார் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com