அணு உலை கழிவுகளை கையாள்வதில் பழைய நிலையே தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கூடங்குளம் அணு உலையில், கழிவுகளை கையாள தற்போது மேற்கொண்டுள்ள நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அணு உலை கழிவுகளை கையாள்வதில் பழைய நிலையே தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கூடங்குளத்தில் உள்ள அணு உலையில், அணுக்கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை என பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், கழிவுகள் அகற்றத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்றும், 
கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் கடலில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, அந்த அணு உலையில் மின் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2019ம் விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஒரு வாரத்தில் மனு தாக்கலோ அல்லது அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் என்ன நிலை பின்பற்றப்படுகிறதோ அதுவே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.