அமைச்சராவதற்கு எல்லா தகுதியும் உள்ளவர்... உதயநிதிக்கு ஆதரவு அளித்த அடுத்த அமைச்சர்...

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சராவதற்கு எல்லா தகுதியும் உள்ளவர்... உதயநிதிக்கு ஆதரவு அளித்த அடுத்த அமைச்சர்...

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்; “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம் இல்லை. இது மக்களுக்கு நன்றாக தெரியும். ஐபிஎஸ் வேலையை அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் ஏதோ எதிர்பார்த்துதான் வந்துள்ளார்” என்றார்.

மேலும் தமிழகத்தில் உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. உதயநிதி ஸ்டாலின் கடந்த 6 மாத காலமாக சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, இளம் வயதில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். அவர் அமைச்சராக தகுதியானவர் என கூறினார். ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.