மகள் திருமணத்துக்கு ஊர் மக்களின் பெயரை பத்திரிக்கையில் - அச்சடித்த ஊராட்சி மன்றத் தலைவர்!!

ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது மகள் திருமணத்திற்கு திருமண பத்திரிக்கைகளில் ஊர் மக்கள் பெயரை அச்சடித்து ஊர் மக்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

மகள் திருமணத்துக்கு ஊர் மக்களின் பெயரை பத்திரிக்கையில் - அச்சடித்த ஊராட்சி மன்றத் தலைவர்!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் அருகே அமைந்திருக்கும் மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரமேஷை அப்பகுதி மக்கள் இரண்டாவது முறையாக ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். 

ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் இவர் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த நிலையில், அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் இவரது ஊராட்சியில் இருக்கும்  மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 900 குடும்பங்கள் உள்ளனர். 

தனது மகள் ஷாலினியின் திருமணம் வருகிற 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருமண பத்திரிக்கையை ஊரில் உள்ள 900 குடும்பங்களுக்கும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வைத்து வருகிறார்.

மேலும் இவர் அளித்திருக்கும் திருமண பத்திரிக்கையில் 900 குடும்பங்களின் தலைவி மற்றும் தலைவர் பெயர்களை தங்கள் நல்வரவை நாடும் உறவினர்கள் பெயர் அச்சடிக்கும் இடங்களில் அச்சடித்திருக்கிறார். 

இதையடுத்து ரமேஷ் கொடுத்த பத்திரிக்கைகளில் உறவினர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்களை பார்த்தவுடன் உறவினர்களே அழைப்பிதழில் பெயர் போட சிந்திக்கும் நிலையில் ஜாதி மதம் கட்சி வேறுபாடின்றி ஊர் மக்களை உறவினர்களாக கருதி தனது குடும்ப பெயரோடு சேர்த்தது ஊர்மக்களை வியப்படைய செய்திருக்கிறது.இதனை கண்ட பலரும் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷை பாராட்டி வருகின்றனர்.