அமித் ஷா உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை : எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அமித் ஷா உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை : எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக தோல்வியைத் தழுவியது. எனவே, தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கட்சிக்குள் நிறைய சலசலப்புகள் இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், நேற்று முன்தினம் தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். நேற்று பிரதமர் மோடியை அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று  நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என அவர்கள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அமித் ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனக் கூறினார்.