கோபாலபுரத்திற்கு வந்த முக்கிய பிரபலம்.... திமுகவினர் ஷாக்...

கோபாலபுரத்திற்கு வந்த முக்கிய பிரபலம்.... திமுகவினர் ஷாக்...

சென்னை கோபாலபுரத்தில் தனது தந்தையின் படத்திற்கு மு.க அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.  

இந்த நிலையில், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தை கருணநிதி வீட்டிற்கு இன்று வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது தந்தை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.அழகிரி, தனது தாயாரிடமும் ஆசி பெற்றுள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது சென்னை வராத மு.க.அழகிரி, இன்று கோபாலபுரம் வந்திருப்பதால் அண்ணன் – தம்பி சந்திப்பு நிகழக்கூடும் என்று கூறப்படுகிறது.