பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை...மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை.!!

திருப்பூரில், பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரை தாக்கிவிட்டு, போக்குக் காட்டி வந்த சிறுத்தையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை...மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை.!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள பாப்பாங்குளம் பகுதியில், பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, கடந்த 24-ஆம் தேதி, வயலில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்து, வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காகச் சென்றபோது, அவர்களையும் தாக்கிய சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

விவசாயியையும், பிடிக்க சென்ற வனத்துறையினரையும் தாக்கி விட்டு தப்பி சென்ற சிறுத்தையை கண்டு அப்பகுதி மக்கள் அச்சப்பட்டு வந்தநிலையில்,   சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், அம்மாபாளையம் பகுதியில் முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தினர். அதன்பின்னர் முட்புதரை சுற்று வளைத்து மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் பிடித்தனர்.

இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், தற்போது சிறுத்தை பிடிப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளனர்.