சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது ....கருணாஸ்

சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது ....கருணாஸ்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220 வது குருபூஜையை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் கூறுகையில், 

சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்தது அதனை மாற்றி அனைத்து சமூகத்திற்குமான அரசாக செயல்பட வேண்டும் என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்தித்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தார் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சசிகலா பயனம் குறித்த கேள்விக்கு அவர் சிறைச்சாலையில் இருந்து வரும்போதே அரசியல் பயனத்தை துவங்கிவிட்டார் என்றும் அவர்களை பற்றி விமர்சனம் செய்ய விருப்பமில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து உண்னிப்பாக கவனித்து வருகிறேன் பின்னர் அது குறித்து விமர்சனம் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக அதிமுகவின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது என்றும் மக்கள் வரிபணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது என்று பேசி புராணம் பாடும் மன்றமாகவே செயல்படுகிறது. என்றும் தெரிவித்தார்.