சேது சமுத்திர திட்டம்...தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு...ஆதரவு தெரிவித்த தலைவர்கள் யார் யார்?

சேது சமுத்திர திட்டம்...தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு...ஆதரவு தெரிவித்த தலைவர்கள் யார் யார்?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை தலைவர்கள் பலரும் ஆதரித்து பேசியுள்ளனர்.

ஆதரவு தெரிவித்த தலைவர்கள்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4 ஆம் நாளான் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் நல்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தலைவர்கள் பலரும் ஆதரித்து பேசியுள்ளனர். 

1. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் - கடல் பசுக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்புமின்றி இத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தார்.

2. கொங்கு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் - கருணாநிதி முயற்சி செய்த போதே இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும் என்றார்.

3. சி.பி.எம் கட்சியின் நாகை மாலி, - தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

4. சி.பி.ஐ கட்சியின் மாரிமுத்து, -  ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுவோரும் மூட நம்பிக்கை கொண்டோரும் இத்திட்டத்திற்கு தடையை ஏற்படுத்தினார்கள். திட்டம் நிறைவேற்றப்பட்டால் சர்வதேச நாடுகளுடன் உறவுகள் மேம்படும் என்று கூறி ஆதரவு தெரிவித்தார்.

இதையும் படிக்க: சேது சமுத்திரம் திட்டம் அமல்படுத்தப்படுமா? முதலமைச்சர் கூறுவதென்ன!!!

5. மதிமுக கட்சி சார்பில் சதன் திருமலைக்குமார் - சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி துறைமுகம் சிங்கப்பூர் துறைமுகம் போல உலகப்புகழ் துறைமுகமாக மாறும் என்று தெரிவித்தார்.

6. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆளூர் ஷாநாவாஸ் -  நல்ல திட்டங்களை தமிழ்நாடு ஒரு போதும் எதிர்த்ததில்லை என்பதற்கு உதாரணம் எய்ம்ஸ் மருத்துவமனையும், தற்போது தீர்மானம் கொண்டுவந்துள்ள இந்த சேது சமுத்திர திட்டமும் தான் . 

7. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் - சேது சமுத்திர திட்டம் வருமேயானால் எங்களை விட யாரும் அதிக மகிழ்ச்சி அடைய முடியாது. தெய்வமாக வழிபடும் ராமர் கால் தட பாதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் 

8. காங்கிரஸ் சார்பில் செல்வ பெருந்தகை - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்த போது சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது உள்ள பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டாலும் 2024ல் காங்கிரஸ் ஆட்சியமைத்து திட்டத்தை செயல்படுத்துவோம்.

9. பாமக சார்பில் ஜி கே மணி -  சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தினால், கடலோர பாதுகாப்பும்  கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும். பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்றாலும் பொருளாதார ரீதியாக இந்த திட்டம் பலனளிக்கும்.

10. அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் - சேது சமுத்திர திட்டத்தால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவதாக அவர்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்களுக்கு பயனளிக்க கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக ஆதரிக்கும்.

11. திமுக சார்பில் தங்கம் தென்னரசு - நவீன காலத்தில் கடல் வாணிபம் செழிக்க வேண்டுமென்றால் இந்த சேது சமுத்திர திட்டம் மிக முக்கியமான ஒன்று. புதிய தொழில் முதலீடுகள் வர இந்த திட்டம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறி முதலமைச்சரின் சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.