கூடலூரில் உலாவும் ஆட்கொல்லி புலி... மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்கும் பணி தீவிரம்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 6 நாட்களாக போக்குகாட்டி வரும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கூடலூரில் உலாவும் ஆட்கொல்லி புலி... மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்கும் பணி தீவிரம்...

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை,  தேவன் எஸ்டேட்,  மேபீல்டு போன்ற பகுதிகளில் சுற்றித் திரியும் புலி, இதுவரை, 3 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், கொன்று குவித்துள்ளது. இதனால்  அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில், மருத்துவக் குழுவுடன் இணைந்து, 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 6 நாட்களாக புலி போக்குகாட்டி வருவதால், மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாடுவது கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், எக்காரணத்தைக் கொண்டும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.