மாணவி ஸ்ரீமதி தற்கொலை விவகாரம் !!! டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்...

மாணவி ஸ்ரீமதி தற்கொலை விவகாரம் !!! டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்...

தடையை மீறி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது.நீதி கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் : கணியாமூர் பள்ளியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் முகத்தில் ஏற்பட்ட காயத்தை மையமாகக் கொண்டு தற்கொலை அல்ல கொலைதான் என்று பெற்றோர்கள் போராடினர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி தலைமையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட போராட்டம் நடைபெற இருந்தது. இதனால் காவல்துறையினர் வெகுவாக சாலைகளின் ஒவ்வொரு பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர். அப்போது டிஜிபி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின் தொடர்ச்சியாக முற்றுகையிட வந்த பெண்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென்று சாலையில் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டு பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கோஷங்களை எழுப்பி வந்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் இருக்கக்கூடிய சமுதாய கூடத்திற்கு காவல்துறையினர் வாகனத்தில் கூண்டோடு கூட்டிச் சென்றனர்.

மாணவி ஸ்ரீமதி வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் ,அதேபோல போஸ்கோ சட்ட பிரிவை வழக்கில் இணைத்திடவும் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும். மேலும் உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும். எங்களை கைது செய்து நீதிக்காக போராடுபவர்களை காவல்துறையினர் இப்படி நடத்துவது கண்டிக்கத்தக்கது என மாதர் சங்கம் சார்பாக கூறுகின்றனர்.