முல்லை பெரியாறு விவகாரத்தில், இரு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம்...

முல்லை பெரியாறு அணை தொடர்பாக இருமாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என கேரள மாநில முதல்வருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்

முல்லை பெரியாறு விவகாரத்தில், இரு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம்...

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என உறுதியளித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

அந்த கடிதத்தில், தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடினமான காலகட்டத்தில் தமிழக மக்கள் கேரள மக்களுக்கு துணை நிற்போம் என உறுதி அளித்துள்ள அவர்,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொருத்தவரை, அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், தமிழக அதிகாரிகளும், தொடர்ந்து கேரள அரசுடன் இது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு, இருமாநில மக்களின் நலனை, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியளித்துள்ளார்.