ஊராட்சிமன்ற தலைவராக வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்...ஆத்திரத்தில் அலுவலகத்தின் மீது சாணி வீசிச்சென்ற எதிரிகள்!!

ஊராட்சிமன்ற தலைவராக  வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்...ஆத்திரத்தில் அலுவலகத்தின் மீது சாணி வீசிச்சென்ற எதிரிகள்!!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மீது சாணியை வீசிச்சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு கிராமம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 2350 வாக்காளர்களை கொண்டது. வல்லம் ஒன்றியத்தில் இளம் ஊராட்சி மன்ற தலைவராக 27 வயதான காயத்ரிதனசேகரன் 985 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பொங்கலை தொடர்ந்து பொலிவிழந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை புதுப்பித்து அதற்கு வர்ணங்கள் பூசப்பட்டு இருந்தன. ஆனால் வர்ணம் தீட்டிய அடுத்த நாளே கட்டிடத்தின் மீது மர்மநபர்கள் யாரோ சாணம் வீசி சென்றுள்ளனர்.

அதேபோல கொங்கரப்பட்டு செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு மாணவர்களின் குடிநீர் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக அமைக்கப்படாத இருந்த குடிநீர் மற்றும் குடிநீர் குழாய் அமைத்து தந்துள்ளனர். அதையும் மர்மநபர்கள் யாரோ மூன்று முறை சேதப்படுத்தியுள்ளனர்.

அதேபோல அந்த ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணற்றில் ஒரு குழாயை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.தொடர்ந்து எந்த வேலை செய்தாலும் மர்மநபர்கள் அதை சேதம் செய்து வருகின்றனர். இதுகுறித்து செஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் தலைவர் காயத்ரி தனசேகரன் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் தலைவர் காயத்ரிதனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.