ஓட்டின் முக்கியத்துவம்... பயணிகளிடம் 10 நிமிடம் பெர்மிஷன் கேட்டு.. ஒட்டு போட்டு வந்த பஸ் டிரைவர்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஓட்டின் முக்கியத்துவம்... பயணிகளிடம் 10 நிமிடம் பெர்மிஷன் கேட்டு.. ஒட்டு போட்டு வந்த பஸ் டிரைவர்

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று காலை முதலே வாக்குப்பதிவுகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி எட்டாவது வார்டு ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனியார் பஸ் டிரைவர். இன்று காலை வழக்கம் போல் தனது பணியை தொடங்கினார். பஸ் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்த வந்துகொண்டிருந்தது அப்போது திடீரென பொம்மிடி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பஸ்சை நிறுத்தி விட்டு பயணிகளிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது ஜனநாயக கடமையை தனியார் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு இன்று வாக்கு அளித்தது வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளது.