டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை

டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை

தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 

பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் தமிழக அரசு அதனைப் பற்றி எடுத்துக் கூறாமல் நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது என கூறிய அவர், டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு இல்லை என கூறினார்.