"ஷவர்மா உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!!

ஷவர்மா போன்ற உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"ஷவர்மா உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம்"   -  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!!

ஷவர்மா போன்ற உணவுகளை உண்டு உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தபின் அமைச்சர் செய்தியார்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மேலை நாட்டு உணவான ஷவர்மா அந்நாடுகளுக்கு சரியாக இருக்கும் எனவும் தமிழக வியாபாரிகள் இதனை உணர்வதில்லை எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு குறைவாக உள்ள ஷவர்மா கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கேரளாவைப் போன்று தமிழகத்திலும் ஷவர்மா தடை செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கேரளாவின் தக்காளி வைரஸ் குறித்து பேசிய அவர், கண்ணத்தில் சிகப்பு நிற கொப்புளம் ஏற்படுத்துவதாலேயே அவ்வாறு  பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதவிர தக்காளிக்கும் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.