குத்துவிளக்கை கச்சிதமாக திருடி செல்லும் தலைப்பா கட்டு திருடன்...சிசிடிவி வைரல்

கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனையில் இருந்த குத்துவிளக்கை, தலைப்பா கட்டுடன்  வந்த திருடன் கச்சிதமாக திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குத்துவிளக்கை கச்சிதமாக திருடி செல்லும் தலைப்பா கட்டு திருடன்...சிசிடிவி வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு பகுதியில் அமைந்துள்ளது,. தனியாருக்கு சொந்தமான பிரபல எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவமனை.

இந்த மருத்துவமனையில் சில நோயாளிகள் சிகிச்சை இறப்பு சம்பந்தமாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் நோயாளிகள் வருகையில்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பூட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

 இதை கவனத்தில் கொண்ட திருட்டு கும்பலை சேர்ந்த ஒரு நபர் கடந்த 22-ம் தேதி அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் புகுந்து காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் குத்து விளக்கை தலைப்பா கட்டு அணிந்து களவாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையை திறக்க வந்த மேலாளர் வரவேற்பறையில் இருந்த குத்துவிளக்கை காணாதா நிலையில் அதிர்ச்சியடைந்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து குத்துவிளக்கை திருடி சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.