தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எனது இரவு படிக்காமல் விடியாது:
சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 46வது புத்தக கண்காட்சிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், நான் மிக நீண்ட நேரம் புத்தகம் படிப்பேன். எனது இரவு படிக்காமல் விடியாது. இத்தனை நாட்கள் புத்தகங்களை படிப்பதால் தான் நான் அனைத்து சவால்களையும் மேற்கொண்டும், எதிர்கொண்டும் வருகிறேன். ஆகவே இளைஞர்கள் படிக்க வேண்டும், புத்தகங்கள் படிப்பது மிகப்பெரிய பலத்தை தரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!
நான் கருத்து கூற விரும்பவில்லை:
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்காக காமராஜர் கொண்டுவந்த மசோதாவை அண்ணா சட்டமாக்கியதாக கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு பற்றிய கூற்றுக்கும், சட்டப்பேரவை வெளிநடப்பு விவகாரத்திலும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.