ராஜேந்திர பாலாஜி  குற்றமற்றவர் என்பதை  நிரூபிப்பார்...அண்ணாமலை.!

நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்தவில்லை என்றும், ஆளுநர் முடிவு எடுப்பதற்கான கால அவகாசத்தை, கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி  குற்றமற்றவர் என்பதை  நிரூபிப்பார்...அண்ணாமலை.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில்  பாஜக தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி ஆகியோர் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், 

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு குறித்த பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பங்கேற்பார் என்றும்., தமிழகத்திற்கு நீட் தேர்வு  அவசியம் என்பதை எடுத்துச் சொல்வார் என்று குறிப்பிட்டார்.

நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்தவில்லை என்றும், ஆளுநர் முடிவு எடுப்பதற்கான கால அவகாசத்தை, கொடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பொதுவானவர் என்பதால் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்., 

மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் ராஜேந்திரபாலாஜி எதற்காக உதவி செய்தார்கள் என்பதற்கான விளக்கத்தை பாஜக நிச்சயம் கேட்க உள்ளதாக குறிப்பிட்டார். ராஜேந்திர பாலாஜி  குற்றமற்றவர் என்பதை  நிரூபிப்பார் என்றும் நீதிமன்றம் செல்லும் வரையில் ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

நீட் தீர்மானத்திற்கு  ஆளுநர்  ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து அவர் பதவி விலக  வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியது ஏற்று கொள்ள முடியாதது என கூறிய அவர்,  ஆளுநர் உரையில் மாநில அரசு எழுதி கொடுப்பதைத்தான் ஆளுநர் படிக்கிறார் அது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை தான் என்றார்.