நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்..அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை...!

நீர் நிலைகளை யார்  ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது கண்ணை மூடிக்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்..அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை...!

தொடர் கனமழை காரணமாக போரூர், ஐயப்பன்தாங்கல், மவுலிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்., நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு குறித்தும், ஏரியை தூர் வாரும் பணிகள் குறித்தும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் அவர் கேட்டறிந்தார்.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நூறாண்டு காலம் இல்லாத அளவிற்கு தற்போது தமிழகத்தில் மழை பொழிவு இருந்ததாகவும் அதன் காரணமாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறினார்.,

இந்த சூழ்நிலையில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று கூறிய அவர்., அதேசமயம் நீர்நிலைகள் மற்றும் நீர் வழி பாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்ணை மூடிக்கொண்டு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என கடுமையாக எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,கேரளா அமைச்சர் போராட்டம் நடத்தட்டும்,   நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி 142 அடி வரைதான் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இருக்க வேண்டும்.

மாலை ஐந்தாறு மணிக்கெல்லாம் நீர்வரத்து அளவு மீறி வந்தது, அப்படியே விட்டுவிட்டால் அணையின் நீர்மட்டம் 145 அடியானது, 146 என ஆகியிருக்கும், அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்றுதான் கண்ணும் கருத்துமாய் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி நீர் வந்ததும் திறந்து விட்டோம் என தெரிவித்தார்..