ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 

பூவிருந்தவல்லி அருகே உள்ள குயிண்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 

சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பாடறியேன் படிப்பறியேன் இசை குழுமம் மற்றும் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் துளிர் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்வின் பொழுது மேடையில் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில்,

பழங்குடியினரின் பேச்சுவழக்கு நம்மை போன்று இல்லாமல் வேறுபட்டு மாறுதலாக இருக்கும். குறிப்பாக பழங்குடியினர்  பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறை தமிழக அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில் மிகவும் முக்கியமாக கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பழங்குடியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய எந்த வகையில் செயல்பட வேண்டுமோ அவை அனைத்தையும் முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருகிறது. நகரப்புறங்களில் முன்னேறி அளவிற்குக்கூட கிராமப்புறங்களில் பலர் இன்றும் பெரும் அளவில் முன்னேற்றம் அடையவில்லை. அவற்றை சரி செய்யும் நோக்கிலேயே தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர்ப்புற கிராமப்புற மக்களை ஒப்பிடும்பொழுது பழங்குடியினர்களின் பழக்கவழக்கங்கள் முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும் குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லிய பொழுது அவர்கள் மறுத்த நிலையில் நாங்கள் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்து பின்னரே அவர்கள் அதனை செலுத்துகின்றனர்.

குறிப்பாக பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை நாங்கள் செல்கின்ற இடமெல்லாம் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில் முத்தமிழ் அறிஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக தற்போது நமது முதல்வர் பழங்குடியின பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து செய்து வருகிறார்.

அதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 பழங்குடியினருக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் 6 வகையான பழங்குடியினர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர நமது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு தரப்பில் எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தமிழக அரசு என்றும் செய்ய காத்திருக்கிறது என்றார்.