காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யும் - அமைச்சர் காந்தி

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யும் - அமைச்சர் காந்தி

சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 9 ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, 5 பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள ஜவுளிப் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், திருச்செங்கோட்டிலும் ஜவுளிப் பூங்கா அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், கதர் வாரியம் அதிக பயனாளர்களுடன் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கதர் வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை 400 ஆக குறைக்கப்பட்டதாகவும், தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.