அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கவில்லை... பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்...

தமிழக அரசு அறிவித்த மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கவில்லை... பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்...

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது முடி காணிக்கையை பழனி ஆண்டவனுக்கு  நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். சண்முகநதி, சரவண பொய்கை,  ஒருங்கிணைந்த முடி மண்டபம்,  திருக்கோவில் தலைமை அலுவலகம்  முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இவர்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் ஐந்து ரூபாய் பங்குத்தொகை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

அதிமுக ஆட்சியில் இந்த கட்டணத்தை 30 ரூபாயாக உயர்த்தி இந்த முப்பது ரூபாய் கட்டணத்தில் 25 ரூபாய் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பங்கு தொகையாக வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களுக்கு மொட்டையடிக்க பக்தர்களுக்குக் அந்த கட்டணம்  30 ரூபாய் கட்டணத்தை பக்தர்கள் செலுத்த தேவை இல்லை என அறிவித்துவிட்டது.

தற்போது தமிழக அரசு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு கடந்த 3 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கவில்லை எனவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனஸ் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளதால் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர் இன்று தங்களது கோரிக்கைகளை பேட்ஜ் அணிந்து பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் கோரிக்கையானது 30 ரூபாய் கட்டணத்தை 70 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் மாதம்தோறும் ஊக்கத் தொகை 5,000 அறிவித்திருந்த நிலையில் அதை 10,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

அதாவது இவர்கள் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் இவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் கொடுத்துவந்த கருணை தொகையாக 1,000 ரூபாயை இந்த முறை வழங்கவில்லை எனவும் இனி வரும் காலங்களில் ஆயிரம் ரூபாய் கருணைத் தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்து பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.