ஓடையில் கவிழ்ந்த அரசு பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓடையில் கவிழ்ந்த அரசு பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை வழக்கம் போல அந்த அரசு பேருந்து கழுகுமலைக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளது.

பேருந்தை லெட்சுமணபெருமாள் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடசலாபுரம் அருகே அரசு பேருந்து வந்துள்ளது. அப்போது மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதமால் இருக்கும் வகையில் டிரைவர் லெட்சுமணபெருமாள் பேருந்தினை திருப்ப முயன்றுள்ளார்.

ஆனால் பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த சிறிய ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த அனைவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை, இது குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதால் வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.