கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம்...தமிழ்த்தாய் பாடல்...மேயர் பிரியா சொன்ன பதில்...!

கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம்...தமிழ்த்தாய் பாடல்...மேயர் பிரியா சொன்ன பதில்...!

கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம்  வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

கோரிக்கை :

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 24 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு, “மக்களின் நேரடிக்குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், அமர்வுபடியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது” என மாமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

பதில் :

இதுகுறித்து பேசிய  மேயர் பிரியா, கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம்  வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : பிப்ரவரி 1க்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்...!

தமிழ்த்தாய் வாழ்த்து :

இதைத்தொடர்ந்து பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், “ மாமன்ற கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் தேசியக்கொடி ஏற்றும் வகையில் கொடிக்கம்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “அடுத்த மாதம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தொடங்கும்” என்று கூறினார்.