அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சிகளையும் எட்டுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் கட்டப்பட்டுள்ள பினாக்கிள் நிறுவனத்தின் பினாக்கிள் இன்போடெக் சொல்யூசன்ஸ் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சிகளையும் எட்டுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று கூறியவர், தமிழ்நாடு அரசின் இலக்கு நிறைவேறும் வகையில் பினாக்கிள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தென்மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், வடபழஞ்சி பினாக்கிள் நிறுவனத்தின் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்தார்.