எடப்பாடியை எதிர்த்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!!

எடப்பாடியை எதிர்த்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவிரி கூட்டு குடிநீர்  வினியோகம் நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலாடி அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குடிக்க தண்ணீர் கிடைக்காததால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாப்பாகுளம் கிராம மக்கள், அருகில் உள்ள கடலாடிக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பாப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த  பெண்கள் தலையில் முக்காடிட்டு, குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்தும், சங்கு ஊதியும், ஒப்பாரி வைத்தும், காலி குடங்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.