தார்சாலையை அறுத்துக் கொண்டு ஓடிய வெள்ளம்... விராலிமலையில் போக்குவரத்து பாதிப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் தார்சாலையை அறுத்துக் கொண்டு ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தார்சாலையை அறுத்துக் கொண்டு ஓடிய வெள்ளம்... விராலிமலையில் போக்குவரத்து பாதிப்பு...

விராலிமலை இடைய பட்டியில் தொடர் மழையால்  தார்சாலை உடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராசநாயகம் பட்டியில் இருந்து இடையப்பட்டி செல்லும் வழியில் தார்சாலை இரண்டாக உடைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வடகிழக்கு கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குளங்கள் ஏரிகள் ஆகியவை நிரம்பி மக்கள் வசிக்கும் கிராமத்தில் கொள்ளும் வந்தது. இதனால் அந்த குளத்தில் நீர் நிரம்பி அந்த சாலை ஓரங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலை இரண்டாக உடைந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதுமட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக பேரிகார்டு களும் அமைத்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 20 ஏக்கருக்கு மிகாமல் விவசாய நிலங்களிலும் தண்ணீர் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றனர்.