85 நாள் கழித்து சென்றும் பயனில்லை. மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை... ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேதனை...

ராமேஸ்வரத்தில் வெகு நாட்கள் கழித்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று, பிடித்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
85 நாள் கழித்து சென்றும் பயனில்லை. மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை... ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேதனை...
Published on
Updated on
1 min read
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா பரவல் காரணமாக 15 நாட்கள் கழித்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட நிறுவனங்கள் ராமேஸ்வரம் பகுதியில் கூட்டணி அமைத்து குறைவான விலைக்கு இறால் மீன்களை வாங்குவதாக மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனவே மீனவர்கள் பிடித்து வரும்  இறால் மீன்களுக்கு அரசு உரிய விலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com