சோலோவா நின்று 9 பேரின் உயிரை காப்பாற்றிய மீனவர்!! தன் உயிரை துச்சம் என்று நினைத்து மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

சோலோவா நின்று 9 பேரின் உயிரை காப்பாற்றிய மீனவர்!! தன் உயிரை துச்சம் என்று நினைத்து மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்களை தனி ஒருவனாக நின்று மீட்ட மீனவரை பொது மக்கள் பாராட்டினர்.

புன்னைக்காயலில், தாமிரபரணி ஆற்றின்  நடுவே புனித தோமையார் ஆலயம் உள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் சிலர் உப்பாற்றில்  இறங்கியபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 9 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளனர். இதனை பார்த்த மீனவர் ஒருவர்  உடனே அவரது படகில் 9 பெண்களையும் அடுத்தடுத்து மீட்டதாக கூறப்படுகிறது. தனியாளாக நின்று தன் உயிரை பணையம் வைத்து 9 பேரையும் மீட்ட மீனவரை  பொதுமக்கள் வெகுவாக  பாராட்டி வருகின்றனர்.