இன்று ஸ்டாலின் தலைமையில் கூடும் முதல் சட்டசபை கூட்டத்தொடர்

16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர்  இன்று  தொடங்குகிறது. கூட்டத் தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்த உடன் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புக்காகவும் சபாநாயகர் தேர்வுக்காகவும் சட்டசபை கூட்டப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று  தொடங்குகிறது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். 

பின்னர் நடைபெறும் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்..

இதனிடையே சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க  எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.