தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது  : அவிழ்த்து  விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் தமிழகத்திலேயே முதல்  ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது  : அவிழ்த்து  விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன!!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி மாநிலம் முழுவதும் தைமாதத்தில் நடைபெறுவது வழக்கம் அவ்வகையில் தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியை  இன்று  காலை தொடங்கியது. கொரானா காலம் என்பதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

அங்குள்ள வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன அதனை எடுத்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி வருகின்றனர்.  

அந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பேருக்கு மட்டுமே அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோல் இரண்டு தடுப்பூசிகள் போட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாடுகளை அழைத்து வருவார்கள் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கொரோனா  வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போட்டியை கண்டு களித்த  வருகின்றனர்.