கல்வி தொலைக்காட்சியில் இன்று  முதல் வகுப்புகள்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று  முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

கல்வி தொலைக்காட்சியில் இன்று  முதல் வகுப்புகள்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு  முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. நோய்த்தொற்று குறையாத காரணத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வியாண்டில் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடங்கப்பட உள்ளன.
 
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.