2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்...! ஆளுநர் உரையுடன் தொடக்கம்..!

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்...! ஆளுநர் உரையுடன் தொடக்கம்..!

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதுகுறித்த சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். அன்று காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும், அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால் அதே நிலை தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் என தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி, அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படும். புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் நடுவில் உள்ள இருக்கையில் அமர்வார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் விசாரணை ஆணையம் அறிக்கைகளை பேரவைகள் நிறைவேற்றி தருமாறு கூறினால் அந்த ஆணைய அறிக்கைகளை சட்டப்பேரவைகளில் வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க : மாரடைப்பில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு துணை காவலர்..! ராணுவ மரியாதையுடன் அஞ்சலி..!