ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்!!

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை ரயில்வே பெண் காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்த நிலையில் பயணி ஒருவர் அதில் ஏற முயற்சித்தார். அப்போது ரயில் நகரத் துவங்கியதால் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார்.

இதனைக் கவனித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் அவரை உடனடியாக மீட்டார். இதனால் அந்தப் பயணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் பெண் காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.