காதலை விடாத மகள்..! ஆத்திரத்தில் குடித்துவிட்டு பெற்ற மகளையே மது பாட்டிலால் குத்திய தந்தை!

காதலை விடாத மகள்..! ஆத்திரத்தில் குடித்துவிட்டு பெற்ற மகளையே மது பாட்டிலால் குத்திய தந்தை!

குடிபோதையில் தான் பெற்ற மகளை மது பாட்டிலால் குத்திய தந்தையின் செயலால் மதுரை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முரளி கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகள் ராஜேஸ்வரி பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் சமீபகாலமாக ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தந்தையான முரளிக்கு பிடிக்காத நிலையில் நேற்றிரவு மதுபோதையில் வந்த முரளி, தனது மகள் என்றும் பாராமல் ராஜேஸ்வரியை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த  ராஜேஸ்வரியை உறவினர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குடிபோதையில் பெற்ற மகளை மது பாட்டிலால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com