தற்கொலை செய்த மகனின் இழப்பைத் தாங்க முடியாத தந்தையும் தற்கொலை.. விழுப்புரத்தில் நடந்த கொடூரம்!!

விழுப்புரத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மகன் இறப்பை தாங்க முடியாமல் தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த மகனின் இழப்பைத் தாங்க முடியாத தந்தையும் தற்கொலை.. விழுப்புரத்தில் நடந்த கொடூரம்!!

விழுப்புரம் மாவட்டம் வானகார குப்புசாமி வீதியில் கூலி வேலை செய்து வரும் இளைஞர் ரவிக்குமார் வயது(22).. தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் மாத தவணையில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த இரு சக்கர வாகனத்திற்கு கடந்த மூன்று மாதமாக மாத தவனையை ரவிக்குமார் செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர் இளைஞரின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இளைஞர் கடந்த 25 ஆம் தேதி இரவு வீட்டிற்கு அருகிலுள்ள கட்டிடத்தில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பூச்சி மருந்து அருந்திவிட்டதாக கூறியுள்ளார்.  

இதனையடுத்து அவரது நண்பர்கள் ரவிக்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர் மேகநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மகன் உயிரிழந்த சோகத்தில் அவரது தந்தை செல்வமும் உயிரிழந்துள்ளார். பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மகன் இறப்பை தாங்க முடியாமல் தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.