ஊரோடு சேர்த்து வையுங்கள் :  ஆட்சியரிடம் மனு கொடுத்த குடும்பம் !!

ஊரோடு சேர்த்து வையுங்கள் :  ஆட்சியரிடம் மனு கொடுத்த குடும்பம் !!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக் கூரைக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மூன்றாவது மகள் முத்துலட்சுமி, வீட்டுக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை முத்துலட்சுமி திருமணம் செய்து கொண்டதால் பழனியப்பன் குடும்பத்தை கட்டையாண்டிப்பட்டி மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து தங்களை மீண்டும் ஊரோடு சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனியப்பன் புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை பழனியப்பனின் வீட்டுக் கூரைக்கு மர்ம நபர்கள் தீவைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் புகார் அளித்ததன் பேரில் பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.