அக்னிபத் வீரர்களின் வேலைவாய்ப்பை கொச்சைப்படுத்தக்கூடாது - ஜி.கே.வாசன் வேண்டுகோள் !!

தலைவர்கள் பொருத்தவரை இளைஞர்களுக்கு துணையாக இல்லாவிட்டாலும் ,அவர்களிடம் தவறான கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று விரும்புகிறேன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.

அக்னிபத் வீரர்களின் வேலைவாய்ப்பை கொச்சைப்படுத்தக்கூடாது - ஜி.கே.வாசன் வேண்டுகோள் !!

ம. பொ.சிவஞானத்தின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஜி.கே.வாசன், 

தமிழ்நாடு என்ற பெயருக்கு அடித்தளம் நாட்டியவர், திருத்தணியை தமிழகத்திற்கு உறுதி செய்தவர் என்றும் தேசியமும் தெய்வீகமும் தமிழ் தமிழகம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய வாழ்வில் செயல்பட்ட தலைவர் எனவும் கூறினார். மேலும், தமிழக அரசு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.  

தமிழக அரசு ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை அரசுக்கு அன்போடு தெரிவிக்க விரும்புகிறேன் அதை அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து ஒரு நல்ல அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார் தொடர்ந்து பேசிய அவர், 

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள மாணவர் இளைஞர்களிடம் விழிப்புணர்வை பெரிதளவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். அக்னிபாத் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பேச்சுக்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார். 

அக்னிபாத் மாணவர்களுடைய ராணுவ வேலை வாய்ப்பை கொச்சைப்படுத்தி பேசுவது ஒருபோதும் ஏற்புடையது அல்ல நாட்டுக்கு அது நலன் சார்ந்தது அல்ல என்றும் ராணுவத்தின் உடைய மதிப்பை யாரும் குறைத்து எடை போடவேண்டாம் எனவும் இளைஞர்களுக்கு நல்வாழ்வுக்கு இடையூறாக யாரும் நிற்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். மேலும்  தலைவர்கள் பொருத்தவரை இளைஞர்களுக்கு துணையாக இல்லாவிட்டாலும் அவர்களிடம் தவறான கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.