ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது...!

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது.  

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவடைந்தது. இது புதுச்சேரிக்கு தென்கிழக்கே- கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.  

மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நான்காம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்  பகுதிகளில் மேற்கு வங்கக் கடலை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே ஐந்தாம் தேதி புயலாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.