வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அந்த இரண்டு நாட்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.