ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடவேண்டும் :  மீனவர் சங்கத்தினர் கோரிக்கை !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடவேண்டும் :  மீனவர் சங்கத்தினர் கோரிக்கை !!

ராஜீவ் காந்தி மீனவர் நல பாதுகாப்பு சங்கம் நிக்கோலாஸ், கனவாய் மீன்பிடி சங்கம் நம்புராஜ் ஜனநாயக சங்கு கூலி சங்கம்  முகமது, தூத்துக்குடி மாவட்ட சங்கு கூலி சங்கத்தின்  பரமசிவம், சிந்தாதிரை மாதா பருவலை நண்டுகளை சங்கம் சந்தனராஜ், திரேஸ்புரம் மாதவன் நகர் காலனி ஊர் சார்பாக மகாராஜன், துப்பாக்கி சூட்டில்  காயமடைந்த தங்கம், கிளின்டன், செல்வம், ஏவிலின், சண்முகராஜ், ஜேசு ஆனந்த், சிலுவை, பாலகுமார், ராஜா, வீரபாகு, ஆனந்த் கண்ணன், ஜோயல் உள்ளிட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த திருமதி தங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 2008ம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் விவரம் தெரியாமல் நான் கலந்து கொண்டேன். தற்போது இந்த ஆளை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை விற்கப்படுவதாக என் உரிமையாளர் அறிவித்தது இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் கைவிட வேண்டும். ஆலை குறித்த வழக்கில் நல்ல முடிவு நீதிமன்றத்தில் கிடைக்கும் எனவே ஆலையை திறந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று கூறினார். 

ராஜீவ் காந்தி மீனவர் நல பாதுகாப்பு சங்க தலைவர் நிக்கோலாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஸ்டெர்லைட் ஆலை விற்கப்படுவதாக அதன் உரிமையாளர் அறிவித்திருக்கிறார் ஆனால் அந்த ஆலையை விற்கக் கூடாது என அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பில் கூறுகிறோம் ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான வேலை இன்றி ஏற்கனவே தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆலை விற்கப்பட்டால் மேலும் பலர் வேலையின்றி தவிப்பார்கள் எனவே ஆலை விற்கக் கூடாது என்றார். 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதன் உரிமையாளருக்கு நாங்கள் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துவோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கிறோம் என்ற நிலையில் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர் உயிர்சேதம் நடைபெற்றதால் சிலர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அணிக்கு பயந்து வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மீனவ சமுதாயம் உட்பட பல சமுதாயத்தினர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.