தமிழகத்தில் தினசரி பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது : கொரோனா பரவலால் மக்கள் அச்சம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 18 ஆயிரத்தை நெருங்கியதால், பொதுக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது : கொரோனா பரவலால் மக்கள் அச்சம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 17 ஆயிரத்து 934 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு, அசுர பாய்ச்சலில் தொற்று உயர்ந்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், மேலும் ஏழாயிரத்து 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  28 லட்சத்து 47 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் நான்காயிரத்து 39 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சத்து 21 ஆயிரத்து 725 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.  அதே சமயம், தீவிர கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.