யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்...

பல்வேறு சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், யூடியூப் வலைத்தளம் மூலம் பிரபலமானார். இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நடப்புகளை விமர்சித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
 
இதில் குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக சாட்டை யூடியூப்பர் துரைமுருகன் பாண்டியன் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. திருவிடைமருதூர் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் புகாரில் திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தார்.
 
இந்த நிலையில், டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனக்கு ஜாமீன் வழங்ககோரிய மனுவை விசாரணை செய்த திருவிடைமருதூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.