ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து ரவிசந்திரனை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க இயலாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து ரவிசந்திரனை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து ரவிசந்திரனை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க இயலாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கடந்த 29ம் ஆண்டுகளுக்கு முன் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் விடுதலை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்கள், சிறைக்காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். தாம் 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை குறிப்பிட்ட அவர், மிகுந்த மன உளைச்சல் ஆளாகுவதுடன்  உடல் நலமும் பாதிப்பதாக தெரிவித்தார். 

மேலும்  தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டும்,  ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார். சுமார் 1600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள  நிலையில், தனது மனு பரீசிலிக்கப்பட வில்லை எனவும், தம்மை  விரைந்து விடுவிக்க உத்தர விட வேண்டும் எனவும் கோரினார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்  பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் அமர்வு, இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக தெரிவித்தனர்.  மேலும் 7பேரின் விடுதலை தொடர்பான விவகாரம், குடியரசுத் தலைவரின் முடிவுக்காக காத்திருப் பதால், இந்த வழக்கில் எத்தகையை முடிவையும் எடுக்க இயலாது என நீதிபதிகள் விளக்கினர்.  இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், மனுதாரர் அதனை எதிர்த்து முறையிடலாம் என கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.