100% கழிவுநீர் அகற்றலுக்கு வாய்ப்பே இல்லை...  இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கை தகவல்...

கழிவுநீர் அகற்றல் என்பதற்கான வாய்ப்பு மிக அரிது என்று இந்திய கணக்காய்பு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

100% கழிவுநீர் அகற்றலுக்கு வாய்ப்பே இல்லை...  இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கை தகவல்...
தமிழகத்தில் நூறு விழுக்காடு பாதுகாப்பான கழிவுநீர் அகற்றல் என்பதற்கான வாய்ப்பு மிக அரிது என இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை பெருநகர பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அரசு கணிசமான அளவில் முதலீடு செய்தும், திட்ட செயலகத்தில் இருந்த மந்தமான போக்கு, முழுமையான திட்டமிடல் இல்லாமை காரணமாக, கழிவுநீர் அகற்றல் என்பதற்கான வாய்ப்பு மிக அரிது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கழிவுநீர் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக நடைபெறும் திட்டங்களை முடிப்பது இயல்பை மீறிய தாமதங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மழைநீர் வடிகால்களுக்குள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கலந்து, அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்றதன் விளைவாக நீர்நிலைகளில் மாசு  அதிகமாக ஏற்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.