மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் தடை விதித்த மத்திய அரசு!!

ரூ.926 கோடி நிதி பாக்கி வைத்துள்ள தமிழக அரசு

மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் தடை  விதித்த மத்திய அரசு!!

மத்திய அரசின் கிரிட் ஆபரேட்டரான  பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் செயல்படும் மின்உற்பத்தி நிறுவனங்களால் மாநில மின்விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய  5 ஆயிரத்து 85 கோடி ரூபாயை  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, பீகார், மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன.

குறிப்பாக தமிழகம் 926 கோடி ரூபாய்  பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த தொகையை செலுத்த இரண்டரை மாதங்கள் அவகாசம் வழங்கியும் பணத்தை செலுத்தாதால்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கவும், விற்கவும்  முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால், பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.