மாணவி கழுத்தில் ஏறிய தாலி..சில வினாடிகளில் மாயம்...கதறிய கணவன்..ஆனா!! கதையே இங்க வேற?

தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே மணப்பெண் தப்பி ஓடிவிட்டதால் வேலூரில் பெரும் பரபரப்பு நிலவியது.
மாணவி கழுத்தில் ஏறிய தாலி..சில வினாடிகளில் மாயம்...கதறிய கணவன்..ஆனா!! கதையே இங்க வேற?
Published on
Updated on
1 min read

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கு முடிவு செய்த பெற்றோர், கடந்த 14-ந் தேதி காலை நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது யாருக்கும் தெரியாமல் மணப்பெண் தப்பியோடி உள்ளார்.

மணப்பெண் ஓடியதை அறிந்து  அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியும்,  அவர் கிடைக்கவில்லை என்று தெரிகின்றது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com