எமனாக வந்த தேனீக்கள் .. பணியின் போது டேங்க் ஆபரேட்டருக்கு ஏற்பட்ட நிலைமை!! ஆற்காட்டில் பரிதாபம்

எமனாக வந்த தேனீக்கள் .. பணியின் போது டேங்க் ஆபரேட்டருக்கு ஏற்பட்ட நிலைமை!! ஆற்காட்டில் பரிதாபம்

பணியின் போது தேனீக்கள் கொட்டியதால் டேங்க் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

ஆற்காடு மாசாபேட்டை பகுதியை சேர்த்தவர் அன்பு. இவர் ஆற்காடு நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் அன்பு மற்றும் அவருடன் பணி புரிந்து வரும்  தினகரன், சீனிவாசன் ஆகிய மூவரும் ஆற்காடு பூபதி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு தேனீ கூட்டம் அவர்கள் மூவரையும் சரமாரியாக கொட்டியுள்ளது..

இதில் காயம் அடைந்த அவர்களை மீட்டு அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தினகரன், சீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com